ஆட்டோ ஓட்டும் சாய் பல்லவி ! மாரி- 2

சாய் பல்லவியின் முதல் தமிழ் படமான தியா போதிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், சாய் பல்லவி தற்போது தனுஷ், மற்றும்  சூர்யா   படங்களில் ஜோடியாக  நடித்து வருகிறார்.

இதில் தனுஷின்  `மாரி-2′ படத்தில் சாய் பல்லவி ஆட்டோ ஓட்டும் பெண்  கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்காக சாய் பல்லவி சிறப்பு பயிற்சியும் எடுத்து வருகிறாராம். பாலாஜி மோகன் இயக்கும் இந்த படத்தில் நடிகர் கிருஷ்ணா, வரலட்சுமி முக்கிய கதாபாத்திரங்களிலும்  மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாகவும்  நடிக்கிறார்.

இந்த பத்தின்  படப்பிடிப்பு 60 சதவீத முடிந்துவிட்ட நிலையில், முழு படப்பிடிப்பையும் வருகிற ஜூலை மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Leave a Response