ஆந்திராவில் 13 வயது சிறுவனுக்கும் 23 வயது பெண்ணுக்கும் நடந்த திருமணம் ! ஆட்சியரின் அதிரடி தீர்ப்பு !

ஆந்திராவின் கர்னூலில் உள்ள உப்பிரஹால் கிராமத்தில், 13 வயதான சிறுவனுக்கும் 23 வயதான பெண்ணுக்கும் இடையே திருமணம் நடைபெற்றதாக, ஒரு அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

இந்த சம்பவத்தை குழந்தை திருமணம், அந்த சிறுவனுக்கு எதிராக நடந்திருக்கும் வன்முறை, என எண்ணி விசாரிக்க சென்றவர்களுக்கு. இது காதல் திருமணம் என்ற அதிர்ச்சி செய்தி தான் கிடைத்தது. இணையத்திலும் இந்த முரணான திருமணம் குறித்த செய்தியும், புகைப்படமும் வெளியாகி கடும் விமர்சனங்களுக்கு ஆளானது.

இதனைத்தொடர்ந்து இந்த திருமணம் செல்லாது எனவும், சட்டத்திற்கு புறம்பானது எனவும், அதிகாரிகள் தரப்பில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த மாவட்ட ஆட்சியர் சத்தியநாராயணன் முன்பு அந்த சிறுவனும், பெண்ணும் நேற்று ஆஜரானார்கள்.

அப்போது அவர்களிடமும் அவர்களின் குடும்பத்தாருடனும் பேசிய ஆட்சியர். சட்டப்படி இந்த திருமணம் செல்லாது. சிறுவனுக்கு 21 வயது ஆன பிறகு அவர்கள் சேர்ந்து வாழ்வதை பற்றி அவர்களே முடிவுசெய்துகொள்ளட்டும். அதுவரை இருவரும் அவரவர் வீட்டில் தனிதனியே வாழ வேண்டும். என கூறி அனுப்பியிருக்கிறார்

Leave a Response