தங்களுக்காக சீர் செய்யப்படாத சாலைகள் இவர் வருகைக்காக சீரமைக்கப்படுவதா ? கொடைக்கானல் மக்கள் வேதனை !

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள மலர் கண்காட்சியை முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார். அதற்காக நடைபாதைக்கு டைல்ஸ் ஒட்டுதல், புதிதாக சாலை அமைத்தல் என நகர் முழுவதும் பராமரிப்பு பணிகள் அவசர அவசரமாக  நடைபெறுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் வருவதில் தங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என கூறிய கொடைக்கானல் வாசிகள், தங்களுக்காக சீர் செய்யப்படாத சாலைகள் முதல்வருக்காக சீரமைக்கப்படுவதை நினைத்து வேதனையாக உள்ளது என்றனர். முதல்வர் விழாவை முடித்து சென்ற பிறகு சீரமைக்கப்பட்ட சாலைகள் மீண்டும் சேதமடைய போவது உறுதி.

ஆனால் அதற்கு பிறகு அதிகாரிகள் இதனை சீர்செய்ய போவதில்லை என கடுமையாக சாடினர். ஏரிசாலை, நாயுடுபுரம் சாலைகளில் நடைமேடை அமைக்கப்பட்டு வருவதால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதியடைந்தனர். சாலைகளில் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Leave a Response