மக்கள் வரிப்பணத்தில் நினைவிடம் கட்டுவதா ? உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை…

அரசு செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி தமிழக முதலவர்  ஜெயலலிதா உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனை சேர்க்கப்பட்டு சிகிச்சி பலனின்றி  உயிரிழந்தார். பின்னர்  அவரது உடலை அரசு மரியாதையை உடன்  மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு பின்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து மெரினாவில் ஜெயலலிதாவிற்கு நினனவிடம் ரூ.50 கோடி செலவில் அமைக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது. அதன்படி ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க மே 7ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவருக்கு நினைவிடம் கட்டுவது சட்டவிரோதம் என்றும் மக்கள் வரிப்பணத்தில் நினைவிடம் கட்டுவது தவறென்றும் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வர உள்ளது.

Leave a Response