அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரப்படுத்தகூடது ! அமைச்சர் அறிவிப்பு !

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் (புதன்கிழமை) இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியாகின.

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in

ஆகிய மூன்று இணையதள முகவரிகளில் வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.1 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் – 94.1 சதவீதம் மற்றும் மாணவர்கள் – 87.7 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6.4 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தம் 1,907 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 238 ஆகும். அதிகபட்சமாக விருதுநகர் – 97 சதவீதம் (முதலிடம்), ஈரோடு – 96.3 சதவீதம் (இரண்டாமிடம்), திருப்பூர் – 96.1 சதவீதம் (மூன்றாமிடம்) பெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டம் 83.35 சதவீதத்துடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

பாட வாரியாக தேர்ச்சி விகிதம் விவரம் பின்வருமாறு:

இயற்பியல் – 96.4%
வேதியியல் – 95.0
கணிதம் – 96.1%
உயிரியல் – 96.34
விலங்கியல் – 91.9%
தாவரவியல் – 93.9%
வணிகவியல் – 90.30%
கணக்குப் பதிவியல் – 91%
கணினி அறிவியல் – 96.1%

1,001 முதல் 1,100 மதிப்பெண்கள் வரை 71,368 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.

901 முதல் 1,000 மதிப்பெண்கள் வரை 1,07,266 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.

701 முதல் 800 மதிப்பெண்கள் வரை 1,65,425 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.

700 மதிப்பெண்களுக்கு கீழ் 8,60,434 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள் ஜூன் 25-ஆம் தேதி மீண்டும் தேர்வு எழுதலாம். தனியார் பள்ளிகளில் சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக் கூடாது. மீறும் தனியார் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Response