எங்கள் ஆட்சி அமையட்டும்! அதிகாரிகள் என்ன கதி ஆகிறார்கள் என்று பாருங்கள்-டி.டி.வி தினகரன்..!

எங்களது ஆட்சி அமைந்தவுடன் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ மதுரையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “தமிழர்களின் கலாசாரத்தை உலகமெங்கும் பரப்பிய பெருமை நகரத்தாருக்கும் உண்டு. அந்த சமுதாய பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது கண்டிக்கத்தக்கது.

கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளும் கட்சியினருக்கு துணையாக அதிகாரிகள் செயல்படுகின்றனர். எதிர்க்கட்சிகளின் வேட்பு மனுவை கூட ஏற்க மறுத்து தள்ளுபடி செய்கின்றனர்.

எங்கள் கட்சியினர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அதிகாரிகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். எடப்பாடி பழனிசாமி அரசு மாறி, எங்களது ஆட்சி அமைந்தவுடன் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காது, கைதும் செய்யாது. தமிழகத்தில் தற்போது நடைபெறுவது பா.ஜ.க.வின் கிளை ஆட்சிதான் என்று காட்டத்தோடு தெரிவித்தார்.

Leave a Response