ராகுல் காந்தி பிரதமரா?..சந்தேகம்தான்..! சொல்கிறார் மம்தா பானர்ஜி..!

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றால், பிரதமர் ஆவீர்களா? என்று ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆம், ஏன் கூடாது? என்று ராகுல் காந்தி பதிலளித்தார்.

இவரது கருத்துக்கு பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் விமர்சனம் செய்தனர். ராகுல் காந்தி ஆணவத்துடன் பிரதமராவேன் என்று பேசுவதாகவும், வாரிசு அரசியல் மீண்டும் தலையெடுக்கிறது என்றும் அவர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜியும் ராகுல் காந்தியின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார். “ராகுல் காந்திக்கு தன்னுடைய கருத்தை கூற முழு உரிமை உள்ளது. ஆனால், தற்போதைய கள நிலவரப்படி காங்கிரஸ் கட்சியால் மெஜாரிட்டியாக வர முடியாது என்பதுதான். கூட்டாட்சி முன்னணிதான் இந்தியாவின் எதிர்காலம்” என்று மம்தா கூறினார்.

அதேபோல், கூட்டாட்சி முன்னணிக்கு நீங்கள் தலைமை தாங்குவீர்களா என்ற கேள்விக்கு, ‘நாங்கள் எல்லோரும் ஒருங்கிணைந்த குடும்பம் போல் செயல்படுவோம். அதுதான் நாட்டிற்கு நல்லது’ என்று பதிலளித்தார்.

Leave a Response