கர்நாடகா தேர்தலில் பாஜக வென்றால்தான் தமிழகத்திற்கு நல்லது.. முதல்வர் கருத்து !

கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான ஒட்டு எண்ணிக்கை வருகின்ற  மே 15ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்தால் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று சில நாட்களுக்கு முன்பு எச்.ராஜா பேட்டி அளித்து இருந்தார். அதேபோல் இன்று பேட்டி அளித்த பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் காவிரி பிரச்சனை தீர வேண்டும் என்றால் கர்நாடகாவில் பாஜக வெற்றிபெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தற்போது தமிழக முதல்வரும்  இதே கருத்தை கூறியுள்ளார். அதன்படி கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்தால் தமிழக விவசாயிகளுக்கு நல்லது நடக்கும். பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, காவிரி பிரச்சனை தீரும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Response