கொடைக்கானல் அருகே தனியார் தோட்டத்தில் காட்டுயானைகள் முகாம்: பீதியில் தோட்டவேலை தொழிலாளர்கள் !

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பழநி வனப்பகுதிகளில் காட்டுயானைகள் அதிகளவில் உள்ளன. இவை உணவு தேடி இரு  வனப்பகுதிகளிலும் அடிக்கடி இடம் பெயரும். கொடைக்கானல் அருகே புலியூரில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பழநி வனப்பகுதியில் இருந்து 11 யானைகள் இடம் பெயர்ந்து புலியூரை சேர்ந்த தேவராஜ் என்பவரின் தோட்டத்தில் தற்போது முகாமிட்டுள்ளன.

இதனால் தோட்ட வேலைகளுக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்புவாசிகளும் பீதியில் உள்ளனர். தகவலறிந்து வனச்சரகர் ஆனந்தகுமார் தலைமையில் வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் அஞ்சுவீடு தோட்டப்பகுதியில் முகாமிட்டுள்ள 5 யானைகளை விரட்டும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Response