பாகுபலியிடமே பாராட்டுகள் பெற்ற கீர்த்தி சுரேஷ்..!

பழம்பெரும் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் நடிகையர் திலகம் தமிழிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் வெளியாகி உள்ளது.இந்த படத்தை பார்த்த பாகுபலி இயக்குனர் ராஜமௌலி கீர்த்தி சுரேஷ் மற்றும் துல்கர் சல்மான் நடிப்பினை புகழ்ந்து பாராட்டி உள்ளார்.

நடிப்பு என்றால் அது நம்ம சிவாஜி அதன்பின் பெண் நடிகைகளில் நம்ம சாவித்திரியின் நடிப்புக்கு ஈடுஇணையாக யாரும் கிடையாது. சாவித்திரியின் வாழ்க்கை வரலாறறை வைத்து உருவாகியிருக்கும் படம் நடிகையர் திலகம். இந்த படமனாது இருமொழிகளில் உருவாகியிருக்கிறது. தமிழிலில் நடிகையர் திலகம் என்றும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சாவித்திரியாக கீர்த்திசுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனா. சமந்தா பத்திரிகை நிருபராக நடித்திருக்கிறார்.

எவ்வளவு பெரிய நடிகை சாவித்திரி அவரது வாழ்க்கை வரலாறு படத்தில் இப்படியொரு நடிகையை நடிக்க வைத்திருக்கிறார்களே என்று பல்வேறு விமாசனங்கள் எழுந்தன. படத்தின் டீசரை பார்த்தும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை அனைவரும் பாராட்டி தள்ளி இருக்கின்றனர். நேற்று வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார். அப்படியே சாவித்திரியை கண்முடின்னாடி கொண்டு வந்து விட்டார் என்றே சொல்லாம். சாவித்திரியின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் இதுவரை பார்த்திராத வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார். மிகப்பெரியை நடிகையை நம் வாழ்க்கைக்குத் திரும்ப அழைத்து வந்துள்ளார். துல்கர் சல்மான உண்மையிலேயே மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இப்போது நான் அவருடைய ரசிகனாகி விட்டேன். நாக் அஸ்வின் மற்றும் ஸ்வப்னாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய நம்பிக்கை, உறுதி எல்லாமே குறிப்பிடத்தக்கது என குறிப்பிட்டு தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.

Dailyhunt

Leave a Response