3வது அணி பக்கம் திரும்பும் ஸ்டாலின்-கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தி..!

மூன்றாவது அணி பக்கம் பார்வையை திருப்பும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செயல் கட்சியின் மூத்த தலைவர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

தேசிய அளவில் பா.ஜ.,வுக்கு மாற்றாக காங்கிரசை தூக்கிப் பிடித்து, அக்கட்சித் தலைமையில், ஆங்காங்கே வலுவாக இருக்கும் மாநிலக் கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணியை ஏற்படுத்தினால்தான், பா.ஜ.,வை வீழ்த்த முடியும் என, தி.மு.க., முன்னணி தலைவர்கள் முடிவெடுத்திருந்தனர்.

ஆனால், பா.ஜ., காங்கிரசுக்கு இரண்டுமே வேண்டாம். மாற்றாக மூன்றாவது அணி என்று முயற்சிகள் மேற்கொள்ளும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆகியோரோடு கைகோர்த்து, மூன்றாவது அணி பக்கம் செல்லலாம் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் முடிவெடுத்து செயல்படுகிறார்.

இது கட்சி மூத்தத் தலைவர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. இருந்தபோதும் இப்படியொரு கூட்டணி ஏற்பட்டால், பார்லிமென்ட் தேர்தலில் கட்சிக்காக வேலை பார்க்க வேண்டாம் என அவர்கள் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Response