ஸ்டெர்லைட் ஆலையும் தமிழக அரசும் கபட நாடகம் போடுகிறது-வைகோ குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையும் தமிழக அரசும் கபட நாடகம் நடத்துகிறது என வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் ஸ்டெர்லைட் ஆலையால் கிராம மக்கள் மற்றும் குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்படுகின்றனர்.

குடிநீர் மற்றும் காற்று மாசடைவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பிக்காது என அவர் குற்றம்சாட்டினார்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். ஆலை மூடல் விவகாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையும் தமிழக அரசும் கபட நாடகம் நடத்துகிறது என்றும் வைகோ குற்றம்சாட்டினார்.

Leave a Response