தமிழகத்தின் நிர்வாக கட்டமைப்பிற்காக அயல்நாடு செல்லும் “பிரபல நடிகர்”..!

அரசியல் மாற்றத்திற்கான நேரம் இது. சிஸ்டம் மாற்றப் பட வேண்டும். உண்மையான, வெளிப்படையான சாதி, மதச் சார்பற்ற ஒரு ஆன்மீக அரசியல் கொண்டு வரவேண்டும் என்பதே என் நோக்கம் விருப்பம் என்று தனது அரசியல் வாழ்க்கைக்கு பிரவேசித்தார் “ரஜினி காந்த்”.

பல இன்னல்களை இவர் சந்தித்த போதிலும் மக்களுக்காக பணியாற்றுவேன் என்றும் கூறியிருந்தார், தற்போது ரஜினி காந்த் “சான் பிரான்சிஸ்கோ” செல்ல உள்ளார். இன்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படுகிறார் ரஜினி காந்த்.

தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காக சில பிரமுகர்களை சந்திக்க உள்ளதாகவும், தமிழ் நாடு நிர்வாக கட்டமைப்பு திட்டங்களை தீட்டவும் “சான் பிரான்சிஸ்கோ” செல்ல உள்ளதாகவும், இந்த பயணம் சுமார் பத்து நாட்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் தனது உடல்நிலை வழக்கமான சோதனையை மேற்கொள்ள செல்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது மட்டுமின்றி துக்ளக் வார இதழின் ஆசிரியர் குருமூர்த்தி இன்று ரஜினிகாந்தை அவருடைய இல்லத்தில் சந்தித்தார் என்பது குறுப்பிடத்தக்கது.

ரஜினியின் செயல்பாடுகளை பார்க்கும்போது, ரஜினிகாந்த் விரைவில் தன்னுடைய அரசியல் கட்சியை அறிவித்து முழுமூச்சு அரசியல்வாதியாக பயணிப்பார் என்பது உறுதியாகிறது.

Leave a Response