தேசிய விருது பெற்றது மகிழ்ச்சியை தரவில்லை-நடிகை பார்வதி

தமிழில் ‘பூ’ மற்றும் தனுஷுடன் ‘மரியான்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பார்வதி. 2017ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. டேக் ஆப் என்ற மலையாளப் படத்தில் நடித்த நடிகை பார்வதிக்கு சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. மேலும், பலருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அவர்கள் அனைவரும் விருதை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

ஆனால், பார்வதி யாரும் நன்றி தெரிவிக்க விருப்பமில்லை என தெரிவித்திருந்தார். மேலும், தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் ஒரு இந்தியன். நான் வெட்கப்படுகிறேன். 8 வயது சிறுமி கூட்டுப்பாலியல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்” என்ற வாசகங்கள் அடங்கிய பிரசுரத்தை கையில் பிடித்தபடி ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். தேசிய விருது பெற்ற நிலையிலும் அதற்காக மகிழாமல், சிறுமி ஆஷிபா பற்றி கவலை தெரிவித்துள்ள நடிகை பார்வதியை ரசிகர்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்

Leave a Response