தென்காசியில் முன் விரோதம் காரணமாக எலக்ட்ரீஷியன் மீது கொலை வெறித்தாக்குதல்;மருத்துவமனையில் அனுமதி

தென்காசி, மதன்கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தர் (வயது 48) இவர் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் வரதராஜன் (50), அவரது மகன் அருள் (29) மற்றும் கணேசன் ஆகியோர் முன் விரோதம் காரணமாக, கடந்த செவ்வாய்கிழமை அன்று இரவு வீட்டில் தனியாக இருந்த சுந்தர் மீது இரும்பு கம்பியைக் கொண்டு கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வீட்டின் இரும்பு கேட் கதவை உடைத்து உள்ளே அத்துமீறி நுழைந்த அவர்கள், சுந்தரின் கண்ணை கை விரல்களால் நோண்டி குதறி “சைக்கோத்தனமாக” கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து 4 மணி நேரம் அவரை அவரது வீட்டுக்குள் வைத்து அடித்து உதைத்துள்ளனர். இதில் சுந்தரின் கண்கள் கோரத்தனமாக வீங்கியும், தலை, தோள்பட்டை, வயிறு ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தகளறியில் கிடந்த அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லக்கூட ஆள் இல்லாமல் நேற்று முன்தினம்தான் அவரது உறவினர்கள் அவரை நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மூன்று நாட்களாகியும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று கொலை வெறித்தாக்குதல் நடத்தியவரை விசாரித்து ஏஆர் காப்பி போன்ற சட்ட நடவடிக்கை எதுவும் செய்தது போல தெரியவில்லை. ஆனால் சுந்தரை தாக்கிய தென்காசி நபர்கள் வரதராஜன், அருள், கணேசன் ஆகியோர் நாங்கள் தென்காசி போலீசை நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு கவனித்து விட்டோம். அதனால் சுந்தர் என்னதான் புகார், யார் மூலம் அளித்தாலும் எடுபடாது என்று கூறிக்கொண்டு இருக்கின்றனர்.

சுந்தர் தாக்கப்பட்ட போது அது குறித்து போலீசுக்கு சுந்தர் சார்பில் போனில் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் லோக்கல் போலீசார்தான் வந்து சுந்தரை ஆம்புலன்சில் வந்து ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அவரை தாக்கிய நபர்கள் யார்? என்ன என்பது குறித்து விசாரணை நடத்தாதது மர்மமாகவே உள்ளது. அது மட்டுமல்லாமல், அடுத்த நொடியே எதிரிகள் வரதராஜ் உள்ளிட்டோரும் தன்னை சுந்தர் தாக்கியதாக பொய்யாக போய் ஆஸ்பத்திரியில் படுத்து விட்டு ஒரு மணி நேரத்தில் வெளியே வந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Response