காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து ஸ்டாலினால் தீர்மானம் நிறைவேற்ற முடிந்ததா-அமைச்சர் ஜெயக்குமார்

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து ஸ்டாலினால் தீர்மானம் நிறைவேற்ற முடிந்ததா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்.15 முதல் ஜூன் 15 வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு நிதியுதவி வழங்குகிறது.

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து ஸ்டாலினால் தீர்மானம் நிறைவேற்ற முடிந்ததா?. ஆளுநரே தேவையில்லை என்பவர்கள், ஆளுநரை சந்தித்தது அரசியல் சந்தர்ப்பவாதம். காவிரி விவகாரத்தில் தமிழக அரசு மும்முனை நெருக்கடியை மத்திய அரசுக்கு அளித்துள்ளது.

ஸ்கீம் என்பதற்கு நடுவர் மன்ற தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழுதான். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response