ரஜினியின் டிவிட் இதுவரை மக்களுக்கு ஆதரவாக பேசியிருக்கிறதா-இயக்குநர் அமீர்

சென்னை: ரஜினியின் டிவிட்டர் அதிகாரத்துக்கு ஆதரவாகத்தான் பேசுகிறது என்று இயக்குநர் அமீர் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் இயக்குநர் பாரதிராஜா, சீமான், அமீர் உள்ளிட்டோர் நேற்று செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய இயக்குநர் அமீர், நடிகர் ரஜினிகாந்தை சரமாரியாக விளாசினார்.

அமீர் பேசியதாவது, ‘ரஜினியின் டிவிட்டர் எப்போதும் அதிகாரத்துக்கு ஆதரவாகவே பேசி வருகிறார். ரஜினியின் டிவிட் இதுவரை மக்களுக்கு ஆதரவாக எப்போதாவது பேசியிருக்கிறதா?

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது முதல் ஆளாக ஹேட்ஸ் ஆஃப் என்று கூறியவர் நடிகர் ரஜினிகாந்த். காவல் சீருடை அணிந்தவர்களை தாக்குபவர்களை தண்டிக்க கடும் சட்டம் கொண்டு வரண்டும் என்கிறார் ரஜினி.

கட்சி ஆரம்பித்து அரசியல்வாதியாக போராட்டக்களத்துக்கு வரும் போது காவல்துறை யார் என்று ரஜினிக்கு தெரியவரும். திருச்சியில் கர்ப்பிணி பெண் உஷா போக்குவரத்து காவலரால் உதைத்து தள்ளி கொள்ளப்பட்ட போது ஏன் வாய் திறக்கவில்லை.

உஷா குறித்து கேட்டபோது, வாயே திறக்காமல் கும்பிட்டப்படி சென்றிர்கள். அது வன்முறை இல்லையா? ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெறும்போது போலீசார் தடியடி நடத்தினர். குடிசைகளை எரித்தனர்.

கேட்டதற்கு தேன் கூட்டை கலைத்ததாக கூறினர். போலீஸ்க்கு தேன்கூட்டை கலைப்பதுதான் வேலையா? அலங்காநல்லூரில் போலீஸ் தடியடியில் இருந்து மாணவர்களை காப்பாற்ற முயன்ற தாய்மார்களின் மண்டை உடைந்ததே அது ரஜினிக்கு தெரியாதா?

இப்போது நீங்கள் பேசவில்லை, உங்களை பேச வைக்கிறார்கள். ரஜினியின் குரல் பாசிசத்தின் குரல்’. இவ்வாறு இயக்குநர் அமீர் ரஜினியை கடுமையாக விமர்சித்தார்.

Leave a Response