கன்னடர்களுக்கு ஆதரவான சிம்பு பேச்சு!

தமிழகத்தில் தற்போது காவேரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட சொல்லியும் பல இடங்களில் பிரச்சனைகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக இன்று நடிகர் சங்கம் ஏற்பாடில்
காவேரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து நடத்திய அறவழி போராட்டத்தில் திரைத்துறையை சேர்ந்த தயாரிப்பாளர்கள் மற்றும் பலதரப்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் திரைத்துறையினர் நடத்திய அந்த அறவழி போராட்டத்தில் சிம்பு கலந்து கொள்ளவில்லை, காரணம் அவருக்க் அழைப்பு இல்லையாம். அழைப்பு என்பது யாருக்கும் தனி தனியாக கொடுக்கப்படவில்லை என்பது நடத்தியவர்கள் சொல்கிறார்கள். இப்படி இருக்க சிம்பு இன்று அவருடைய இல்லத்தில் மாலைவேளையில் ஒரு திடீர் பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஏற்படுத்தினார். ஆரம்பமே காமெடி, பத்திரிகையாளர்களை விட அவருடைய ரசிகர்கள் போர்வையில் விசில் அடுக்கும் கூட்டத்தை அவர் கூட்டியிருந்தார்.

சிம்பு உரையின் ஆரம்பம் முதல் பத்திரிகையாளர்களின் இறுதி கேள்விக்கு அவர் கொடுத்த பதில் வரை ஒரு அரைவேக்காடு தனமான பேச்சை தான் கேட்க முடிந்தது. இத்தகைய அரைவேக்காடு தனமான பேச்சை எப்போது தான் மாற்றிக்கொள்வார் என்று அவருக்கு தான் வெளிச்சம். சினிமா துறையில் பல பிரச்சனைகள் இருக்கும் தருவாயில், தற்போது இன்று நடிகர் சங்கம் நடத்திய ஆர்பாட்டம் தேவைதானா என்று பேசிய சிம்பு எதற்கு இன்று பத்ரிகையாளரை சந்தித்தார். தானும் பேசணும், தன் மீது மக்களுக்கும் ஈர்ப்பு ஏற்படவேண்டும் என்பதற்காக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்படு செய்து உளறி தள்ளியுள்ளார். காவேரி தண்ணியை ஏன் நாம் கேட்கவேண்டும் என்று குண்டக்க மண்டக்க பேசி, பத்ரிகையாளர்கள் கேள்விக்கு தத்தலித்துள்ளார் சிம்பு.

சிம்புவின் உரையில் ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது, காவேரி நதிநீர் விஷயத்தில் தனக்கு கன்னட ரசிகர்கள் மத்தியில் எந்தவித பாதிப்பும் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளார் என்பது அவருடைய பேச்சில் தெளிவாக புரிகிறது.

பத்திரிகையாளர்கள் எதாவது கேள்விகளை கேட்டு அவரால் பதில் அளிக்க முடியாமல் போகும்போது தன்னுடைய ரசிகர்கள் கை தட்டும்படி ஏதாவது சம்மந்தம்மில்லாத ஒரு பதிலை தந்தார், அதற்கு அவருடைய ரசிகர்கள் விசில் அடித்து அந்த கேள்வியையே டம்மி ஆகியத்து தான் சிம்புவின் இன்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பின் ஸ்பெஷாலிட்டி. பத்திரிகையாளர்களை மிரட்டும் விதமாக தன்னுடைய ரசிகர்களை தன்னுடைய வீட்டில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வரவழைத்து பத்திரிகையாளர்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் விதத்தில் சிம்பு நடந்துகொண்டார் என்று தான் சொல்லவேண்டும். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ரசிகர்களால் எதாவது அசம்பாவிதம் நடந்தால், சிம்பு தான் எதிர்கொள்ள வேண்டிருக்கும் என்று ஆர்வகோலாராக செயல்படும் சிம்புவுக்கு புரியுமா?

பிரபல நடிகர்களாக கொடிகட்டி பரந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர்கள் ரஜினி, கமல், போன்றோர் கூட பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு அடக்கமாக பதில் சொல்லியுள்ளனர். இவர்கள் யாரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர்கள் பின்னல் ரசிகர்களை வைத்துகொண்டு அவர்களை விசில் அடிக்க வைத்து பத்திரிகையாளர்களுக்கு இடையுறாக அராஜகம் செய்ததில்லை.

ஓட்டுமொத்தத்தில் சிம்புவின் இன்றைய பத்ரிகையாளர்கள் சந்திப்பு காவேரி பிரச்சனைக்காக அல்ல என்பது உறுதி. தன் படங்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகவும், தன்னுடைய பப்ளிசிடிகாகவும் தான் என்று அந்த பத்திரிகையாளர் சந்திப்பு காணொளியை பார்க்கும்போதே நன்றாக புரியும்.

Leave a Response