ஆ.இ.ஆ.தி.மு.க’வின் தமிழக ஆட்சியின் 2 ஆண்டு நிறைவு – கவுன்சிலர் ஸ்டார் எம்.குணசேகரன் ஏற்பாட்டில் வெற்றி விழா:

Amma Unavagam Free food Ward 131
ஆ.இ.ஆ.தி.மு.க’வின் தமிழக ஆட்சியின் 2 ஆண்டு நிறைவை முன்னிட்டு சென்னை மாநகராட்சி வார்டு என் 131’ல் அதன் கவுன்சிலர் திரு.ஸ்டார் எம்.குணசேகரன் ஏற்பாட்டில் மே 30, 2013 அன்று பிரமாண்ட வெற்றி விழா கொண்டாடப்பட்டது. ஆ.இ.ஆ.தி.மு.க’வின் தமிழக ஆட்சியின் 2 ஆண்டு நிறைவை முன்னிட்டு வார்ட் என் 131’ல் அம்மா உணவகத்தில் அன்று ஒரு நாள் மட்டும் இலவச உணவு வழங்கப்பட்டது.

இலவச உணவு வழங்கும் விழாவை ஆ.இ.ஆ.தி.மு.க’வின் தென் சென்னை மாவட்ட செயலாளர் திரு.வி.என்.ரவி ஆரம்பித்து வைத்தார். தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் 2 ஆண்டு ஆட்சியின் சாதனையை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.

அம்மா உணவகத்தில் சாப்பிட்டவர்கள் ஒரு நாள் இலவசமாக உணவு வழங்கிய கவுன்சிலர் ஸ்டார் எம்.குணசேகரனை பாராட்டி, உணவின் சுவை அருமை எனவும் பாராட்டினர்.

விழாவில் ஆ.இ.ஆ.தி.மு.க’வின் வழக்கறிஞர் பிரிவின் தென் சென்னை செயலாளர் பகலவன், மனிபாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.