என் மாநில மக்களின் நலனுக்கான எந்தவித அவமானத்தையும் ஏற்கத் தயார் : சொல்கிறார் ஆந்திரமுதல்வர் “சந்திரபாபு”..

என் மாநில மக்களின் நலனுக்காகவும் அவர்களுக்கான நீதிக்காகவும் எந்த விதமான அவமானங்களையும் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து போரட்டம் நடத்தி வருகின்றன. இதற்காக இந்த இரண்டு கட்சிகளும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்துள்ளன.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராடி வரும் ஆந்திர மாநில தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்களுடன் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வீடியோ கான்பரன்ஸிங்கில் உரையாடினார். அப்போது, நமக்கு கிடைக்க வேண்டிய நீதி தொடர்ந்து மறுக்கப்படுகிறது. ஆனால், அதற்காக நாம் விடாமல் போராட வேண்டும். மத்திய அரசும், பாஜகவும் தொடர்ந்து நம்மைத் தாக்கிப் பேசுகிறார்கள். ஆனால், மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காகவும், அவர்களின் நலனுக்காகவும் எந்த வித அவமானத்தையும் தாங்கிக் கொள்ள நான் தயாராக உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டசபைக் கூட்டத்திலும் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட, தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கறுப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர். அதுமட்டுமன்றி, சந்திரபாபு நாயுடு கூட்டவிருக்கும் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கும் அவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து செல்லவும் முடிவெடுத்துள்ளனர்.

 

Leave a Response