காவிரி வாரியம் குறித்து நாளை முதல்வர் “பழனிசாமி” ஆலோசனை

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நாளை முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். நாளை காலை 10 மணிக்கு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடைபெறவுள்ளது.

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

நீர்வளத்துறையின் காவிரி பங்கீடு தொடர்பாக, மத்திய சட்ட அமைச்சகத்திடம் மத்திய அரசு கருத்து கேட்டிருந்தது. இதற்கிடையில், காவிரி பங்கீட்டு குழுவில் எத்தனை பேர் இடம்பெறுவது, யாருக்கு என்ன அதிகாரம் என்பது தொடர்பாக தமிழகம், கர்நாடகா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

தமிழகம், கர்நாடகா இடையேயான கருத்து வேறுபாடுகளை உச்சநீதிமன்றமே தீர்க்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான பரிந்துரையை, சட்ட அமைச்சகம், மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், இரு மாநில பிரச்னையை தீர்த்து வைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தால் செய்யலாம். அவ்வாறு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தாமதிக்கும் பட்சத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நாளை முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். நாளை காலை 10 மணிக்கு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடைபெறவுள்ளது.

Leave a Response