தஞ்சை பெரிய கோவில் வளாக பெயர் பலகை : தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு !

தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் பெரிய கோவில் என்று விளம்பர பலகை வைத்ததால் தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தஞ்சை பெரிய கோவிலுக்கு தினம்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்தாண்டு கோவில் வளாகத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் என்று விளம்பர பலகை வைக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை பெரிய கோவிலுக்கு பிரகதீஸ்வரர் என்று பெயர் வைத்தது யார், இது சமஸ்கிருத மொழியென சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இரவோடு இரவாக அந்த விளம்பர பலகையில் பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு மூடு மறைத்தனர். இதைதொடர்ந்து பல மாதத்துக்கு பிறகு நேற்று அந்த விளம்பர பலகையில் தஞ்சை பெரிய கோவில் என்று எழுதப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மட்டுமின்றி தஞ்சையை சேர்ந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Response