ஆர்யாவை ஓடவிட்ட மகளிர் அமைப்பினர்???

Ariya
2005ம் ஆண்டு வெளிவந்த “அறிந்தும் அறியாமலும்” திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ஆர்யா. இவர் தற்போது வரை சுமார் 40 படங்களுக்கும் மேலாக தமிழ் மற்றும் வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

ஆர்யா நடிகர் என்பதையும் மீறி, தினமும் பல கிலோமீட்டர் சைகிள் ஓட்டுபவர் இந்த ஆர்யா. திரைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் அவர் நடிப்பையும் மீறி அவருடைய சைகிள் பயணங்கள் அதிகமாக பேசப்படுவது வழக்கம். இதையெல்லாம் மீறி திரைத்துறையில் ‘பிரியாணி’ ஆர்யா என்று கலைப்பதும் உண்டு. காரணம் அவருக்கு பிடித்த நடிகைகளுக்கு ஆர்யா அவ்வப்ப்போது பிரியாணி விருந்து அளிப்பார். அவருடைன் நடிக்கும் சகநடிகர்கள், குறிப்பாக நடிகைகளுக்கு மிக அக்கறை காட்டுபவர் என்று சொல்லப்படுவதுண்டு. தங்களுடைய படங்களின் இசைவெளியீடு மற்றும் எந்த விழாக்களுக்கும் பல நடிகைகள் வருவதில்லை. அதில் குறிப்பாக நயன்தாரா போன்றோர் அடங்குவர். அவர்களே ஆர்யா திரைப்பட விழாவாக இருந்தால் அதில் கலந்துகொள்வது வழக்கம். நடிகைகளின் இந்த செயல் மற்ற நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மத்தியுள் பெரும் புகைச்சலை அவ்வப்போது வெளிப்படுத்தும்.
Ladies Protest against Arya
படங்களில் நடித்து வந்த ஆர்யா தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தும் ஒரு மணமகள் தேடும் நிகழ்ச்சியில் நடித்து வருகிறார். இந்த நிகழ்ச்சிக்காக ஆர்யா தனக்கு மணமகள் தேடும் விதமாக கும்பகோணம் சென்றுள்ளார். கும்பகோணத்தில் ஒரு தனியார் ஹோட்டலில் ஆர்யா தங்கியிருந்த விவரத்தை அறிந்த மகளிர் அமைப்புகள் இன்று காலை அந்த ஹோட்டல் முன்பு கூடி ஆர்பாட்டம் நடத்தி ஆர்யாவை கும்பகோணத்தை விட்டு வெளியேறும்படி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்பாட்டத்தின் காரணமாக அப்பகுதி சில நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

சீகரம் மணமகளை தேடி செட்டில் ஆகுங்கள் மிஸ்டர் ஆர்யா.

Leave a Response