கிராம பின்னணியில் த்ரில் கதையாமே..! “சவரக்கத்தி”

savarakkathi

இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜி.ஆர்.ஆதித்யா இயக்குநராக அறிமுமகாகும் படம் `சவரக்கத்தி’.
இயக்குநர் ராம் – பூர்ணா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லோன் வோல்ப் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிஷ்கின் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கோரெலி இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் மிஷ்கின். தமிழ் சினிமாவில் தலைப்பு கொடுப்பதில் பல பிரச்சனைகள் மற்றும் குழப்பங்கள் உள்ளது.

நான் இறந்து போனால் ஒரு 50 ஆண்டுகள் கழித்தும் என்னை பற்றியும், என் படத்தை பற்றியும் மக்கள் பேச வேண்டும் என்று விரும்புகிறேன். பூர்ணா அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். சொந்தக் குரலில் தமிழில் டப்பிங் பேசியுள்ளார். இந்த படத்தின் வெற்றிக்கு 90 சதவீதம் பூர்ணாதான் காரணம் என்று பல சுவாரஷ்யமான தகவல்களால் இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை பல ஹாலுவுட் படங்களை வெளியிட்ட க்ரைக்ஸ் சினி கிரியேஷன்ஸ் கைப்பற்றியிருக்கிறது. கிராம பின்னணியில் உணர்ச்சிப்பூர்வமான த்ரில் கதையாக உருவாகியுள்ளது.

படம் வருகிற பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response