உலகளவில் ரசிகர்களை ஒன்றிணைக்க நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலுக்கு வர நடிகர்கள் ரொம்பவே ஆர்வம் காட்டி வருகின்றனர். ரஜினி, கமல், விஷால் என நடிகர்கள் பலரும் அரசியல் பிரவேசம் மேற்கொண்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் விஜய். ஏராமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், தனது படத்தின் அரசியல் டயலாக்குகள் மூலம் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். இவரது படங்களான தலைவர, மெர்சல் ஆகியவை பெரும் சர்ச்சைக்குள்ளனாது. இந்நிலையில் உலகளாவிய ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் நடிகர் விஜய் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார். ஏற்கனவே தனது இயக்கத்திற்கு என தனி கொடியை அறிமுகம் செய்து அரசியல் ஆசையை வெளிப்படுத்தியவர் விஜய். இந்நிலையில் நடிகர் விஜயின், விஜய் மக்கள் இயக்கத்திற்கு http://www.vijaymakkaliyyakam.in என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரஜினி, கமல் ஆகியோர் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட கையோடு உறுப்பினர் சேர்க்கைக்காக தனி வெப்சைட்டையும் தொடங்கினர். இந்நிலையில் நடிகர் விஜயும் அதே வேலையை செய்திருப்பது அவரும் அரசியலில் கால் பதிக்கப்போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் என்ற இணையதளம்.. அரசியல் பிரவேசமா?

previous article
தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது: மத்திய அரசு..