ஓட்டுநர் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி மரணம்

driver

ஓட்டுநர் மணிகண்டன் மீது தீ வைத்தது அவரைத் தாக்கிய காவலர்களில் ஒருவர் தான் என கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கத் தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை, தரமணியில் வாடகை கார் ஓட்டுநர் மணிகண்டனை சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக கண்டித்து, காவல்துறையினர் தாக்கினர். மனம் நொந்த அவர் தீக்குளித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த தீக்குளிப்பு சம்பவத்தில் குற்றச்சாட்டப்பட்ட உதவி ஆய்வாளர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. விஜயகுமார் உதவி ஆய்வாளர் பதவியில் இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் இன்று மதியம் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

அதே சமயம் அங்கு வந்த புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மணிகண்டனின் பெற்றோரை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்ல முயற்சி செய்தனர். இதற்கு சரியான காரணமா தெரிவிக்கப்படவில்லை. இதற்கு மணிகண்டனின் நண்பர்கள், சக ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு சிறப்பு அதிரடி படை குவிக்கப்பட்டு இருக்கிறது.

Leave a Response