பெட்ரோல்,டீசல் விலையை ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் கொண்டுவரவேண்டும்: ஸ்டாலின் அறிக்கை

131434795-GSTratecut_6

பெட்ரோல் டீசல் விலை உயர்வை தினமும் உயர்த்துவதை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெட்ரோல், டீசல் மீது உயர்த்தப்பட்ட கலால் வரியை குறைத்தாலோ அல்லது ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் கொண்டுவந்தாலோ, மக்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய முடியும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது, பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்தியிருப்பது குறித்து, மத்திய பாஜக அரசும் கண்டுகொள்ளவில்லை, இங்குள்ள அதிமுக அரசும் வரிக்குறைப்பின் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்பது கண்டனத்திற்குரியது.

மத்திய பா.ஜ.க. அரசு தினசரி விலை நிர்ணயம் செய்யும் கொள்கை முடிவை உடனே திரும்பப் பெற வேண்டும். மத்திய நிதி நிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் உயர்வைக் கட்டுப்படுத்திடவும், நியாயமான விலையில் பெட்ரோல், டீசல் மக்களுக்குக் கிடைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முன் வர வேண்டும். மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் விற்பனை வரியை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Response