மாபெரும் போராட்டம் வெடிக்கும் – எச்சரிக்கும் மாணவர்கள்

student

தமிழக அரசின் திடீர் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாணவர்கள் தங்களது கல்லூரிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

இதேபோல சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் மாணவர்கள் 1000-க்கும் மேற்பட்டவர்கள் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதேபோன்று, திருப்பத்தூர் அருகிலுள்ள பூலாங்குறிச்சி அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேசும்போது, ஐம்பது சதவிகிதம் பேருந்துக் கட்டண உயர்வை அரசு அறிவித்திருக்கிறது. இந்தச் சுமையால், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசு, உடனடியாக இந்தக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், சமூக அமைப்புகள் திரண்டதுபோல திரண்டு போராடுவோம் என்றனர். மற்றும் பேருந்துக் கட்டண உயர்வை திரும்பப் பெறவிட்டால் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுதுள்ளனர்.

Leave a Response