உண்மை சம்பவங்களுடன் வருகிறாள் “மோகினி”

IMG_4426
தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு வணக்கம், என் பெயர் லக்ஷ்மன் குமார் – ப்ரின்ஸ் பிக்சரின் உரிமையாளர் சிங்கம் 2 தயாரிப்பிர்க்கு பிறகு தற்போது “மோகினி” படத்தை தயாரிக்கின்றோம். படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. சென்சார் –க்கு தயாராக உள்ளது.மோகினி திரைப்படம் பிப்ரவரியில் படம் வெளியாகும். மோகினி படத்தின் கதையை மாதேஷ் சார் என்னிடம் கூறும்போது போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. தற்போது பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையாக “திகில்” படங்களுக்கு வரவேற்பு கிடைகின்றது. அதுமட்டும் இல்லாமல் ஒரு வீட்டினுள் அல்லது ஒரு சிறிய இடத்தினுள் மட்டுமே நகரும் கதைகளம் கிடையாது. இக்கதை லண்டனில் நடக்கும் நிகழ்வை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மிக பெரிய காட்சியமைப்புகள் படத்தில் உள்ளது. படத்தில் 55 நிமிடங்கள் வரும் காட்சிகளில் விஷுவல் எபெக்ட்ஸ்மிக அருமையாக வந்துள்ளது. த்ரிஷா இப்படத்தின் கதாநாயகியாக உள்ளது மிக பெரிய பலம் மிகப்பெரிய கதாநாயகிகளில் த்ரிஷாவும் ஒருவர். இப்படத்தின் கதை முழுவதுமே த்ரிஷாவை மையமாக கொண்டே நகரும். படத்தில் பணிபுரிந்த யோகி பாபு மற்றும் சுவாமி நாதனின் காமெடி சிறப்பாக அமைந்துள்ளது மற்றும் அணைத்து கலைஞர்களும் தங்கள் பணிகளை மிக சிறப்பாக செய்து முடித்துள்ளனர். படத்தின் கதையை என்னிடம் கூறியதற்கும் இறுதியாக படத்தை பார்க்கும்போது 10 மடங்கு சிறப்பாக வந்துள்ளது. “மோகினி” திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது

என்னுடய முந்தைய படங்களின் வரிசையில் தற்போது மிக பெரிய படைப்பாக உருவாகி உள்ள படம் மோகினி. இப்படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரதில் நடித்துள்ளார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிக சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் வெகுஜனங்களிடம் எளிதாக சென்றடையும். மக்கள் எதிர் பார்க்கும் அனைத்துமே இப்படத்தில் உள்ளது. இப்படத்தில் கிட்டதட்ட 80% காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கபட்டுள்ளன. “காதலன்” படத்தில் முக்காலா முக்காபுல்லா பாடலில் பிரபு தேவா தலை இல்லாமல் ஆடும் காட்சி முதல் இன்று பாகுபலி வரை விஷவல் எபக்ட்ஸ் மக்களை பிரம்மிக்க வைத்துள்ளது. அதே போன்று இப்படத்திலும் நிறைய விஷவல் எபக்ட்ஸ் காட்சிகள் உள்ளன. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் படம் வந்துள்ளது. இப்படம் உன்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது

Leave a Response