இரு மடங்கான பஸ் கட்டணம் கல்லூரி மாணவர்கள் மாணவிகள் போராட்டம்.

student

பேருந்து உயர்வை கண்டித்து அனைத்து கல்லூரி மாணவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கல்லூரி முன் நின்று போராட்டம் செய்ய வேண்டும்.இதனோடு பொது மக்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்க்கும் படி கேட்டுக்கொள்கிறோம் என்ற செய்தி வாட்ஸ்அப்பில் பரவியது.

இந்தநிலையில் தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பாக அமர்ந்த மாணவிகள், கட்டணம் இருமடங்கானதால் ஊரில் இருந்து கல்லூரிக்கு வர சிரமப்படுவதாக கூறினர். இதேபோல அருப்புக்கோட்டை கல்லூரி மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர்.

அரியலூரில் கல்லூரி மாணவர்களும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Leave a Response