சமுதாயத்திற்கு உதவும் இளைஞர்களின் கதை – ‘காணும் கனவுகள்’!!

தீபலட்சுமி பிலிம்ஸ் சார்பில் கே.எஸ்.ஹரிக்குமார் தயாரிக்கும் படம் ‘காணும் கனவுகள்’. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ஷன் செய்கிறார் ஜே.எஸ்.சங்கர். இவர் பல இயக்குனர்களிடம் துணை – இணை இயக்குனராக பயிற்சி பெற்றவர்.

புதுமுகங்கள் வின்சென்ட், பாபு, ஆதி, நிர்மல், சுதர்சன், ஹரிஹரசுதன், வினிதா, தீபா, அஸ்மிதா, மேரி ப்ரியங்கா, நட்சத்திரா, கிரண்மை உட்பட பலர் நடிக்கின்றனர். இருபதுக்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்களும் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தில் ஏழு பாடல்கள் இடம் பெறுகிறது. இதற்கு ‘இசையரசர்’  வீ.தஷி இசை அமைக்கிறார். மும்பை பாலா ஒளிப்பதிவு செய்கிறார்.  பாடல்களை சிங்கப்பூரை சேர்ந்த கலைவேந்தன், சோ.சிவக்குமார், இனியதாசன் ஆகியோருடன் மகா ஸ்டாலின், இயக்குனர் ஜே.எஸ்.சங்கர், ஆகியோரும் எழுதி உள்ளனர். கென்னடி, மாஸ் மாரி, ரமேஷ் ரெட்டி, ஆகியோர் நடனம் அமைக்க, ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பு செய்கிறார். தயாரிப்பு மேற்பார்வை அண்ணாமலை. இணை தயாரிப்பு – ஏ.நீலகண்டன், எஸ்.ராஜன், தயாரிப்பு – கே.எஸ்.ஹரிக்குமார்

வெவ்வேறு ஊர்களை சேர்ந்த ஏழு இளைஞர்கள் தங்களது திறமையை திரைப்பட துறையில் வெளிப்படுத்த சென்னைக்கு வருகின்றனர். முயற்சியின் போதும், பயிற்சியின் போதும் நண்பர்கள் ஆகின்றனர். அவர்களை நட்பு இணைக்கிறது. நல்ல பல சம்பவத்துக்கு அவர்கள் உதவுகின்றனர். அவர்கள் முன்னேறும் போது இந்த சமுதாயத்துக்கு என்ன மாதிரி முன்னேற்றத்துக்கு காரணமாக இருக்கிறார்கள் என்பதை சொல்லும் படம்.

கலகலப்பும், விறுவிறுப்பும் நிறைந்த இந்த கதையை ஜனரஞ்சகமான படமாக எடுக்கிறார் இயக்குனர் ஜே.எஸ்.சங்கர். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி சென்னையில் படமாகிறது.