அட நம்ம சூர்யா, கார்த்தியோட இணைந்த இயக்குனர் யாரு?

Kadaikutty Singam Poster
சூர்யாவின் ‘2D என்டர்டைன்மென்ட்’ நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் பான்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படம் உருவாகிறது. இந்த படத்திற்கு “கடைக்குட்டி சிங்கம்” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை நேற்று வெளிவந்துள்ளது.

தமிழர் திருநாள் தை பொங்கல் தினத்தை முன்னிட்டு “கடைக்குட்டி சிங்கம்” படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ மற்றும் டைட்டில் நேற்று வெயிடப்பட்டுள்ளது. படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரை சூர்யா நேற்று மாலை ட்விட்டரில் வெளியிட்டார். போஸ்டரில் “பயிர் செய்ய விரும்பு” , “விவசாயி” போன்ற வாசகங்களை காணமுடிந்தது. படத்தில் சாயிஷா சாய்கல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானு ப்ரியா, மௌனிகா, மற்றும் பலர் நடிக்கிறார்கள். D.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிபதிவு வேல்ராஜ்.

இப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் படமாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2018 கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகவுள்ளது.

Leave a Response