அவனியாபுரத்தில் சீறிப்பாயும் காளைகள்..! பாரம்பரிய வீர விளையாட்டு தொடங்கியது.

jallikattu 2

பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியுள்ளது. மதுரை கலெக்டர் வீரராகவராவ், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ், விருதுநகர் எம்.பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு துவங்குவதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி கோயில் காளைகளுக்கான சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து விழா ஏற்பாடுகளை மதுரை கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் கோலாகலத்துடன் துவங்கியது.ஜல்லிக்கட்டில் பங்கேற்க 954 காளைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் காலை 7.00 மணிக்கே வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 624 பேர், மாடுபிடிக்க களம் இறங்க தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, வெள்ளி குத்து விளக்கு என வகைவகையான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 6 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர், 16 பார்வையாளர்கள் காயமடைந்தனர், ஒரே ஒரு வீரர் வலிப்பு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டதை தவிர வேறு அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல் சிறப்பாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

Leave a Response