எம்.எல்.ஏ.க்களுக்கு 100 சதவிகித ஊதிய உயர்வு மு.க ஸ்டாலின் நிராகரிப்பு.

MK-Stalin

தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கு 100 சதவிகித ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. இதற்கான மசோதா நேற்று முன்தினம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்று வரும் நிலையில், ஊதிய உயர்வு மசோதா வாக்கெடுப்புக்கு எடுக்கப்பட்டது.இந்த மசோதா குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் பேசியதாவது, “கடுமையான நிதி நெருக்கடியின்போது எம்.எல்.ஏ.க்களுக்கு 100 சதவிகித ஊதிய உயர்வு தேவையா?. ஊதிய உயர்வு தேவையில்லை என கையெழுத்திட்டுள்ள கடித்தத்தை சபாநாயகரிடம் வழங்க உள்ளோம்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதி தேவைப்படுகிறது என்றால் நாங்கள் எங்கள் ஊதியத்தை தர தயார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை தீரும் வரை உயர்த்தப்பட்ட சம்பளத்தை பெறமாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார். இன்று எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு மசோதா பேரவையில் நிறைவேறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Response