அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியேற்றதற்கு தமிழகத்தில் பெரும் விழா- திருநாவுக்கரசர்!

ah1

ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்  பதவியேற்றதை அடுத்து நேற்றிலிருந்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ்காரர்கள் இனிப்புகளைக் கொடுத்து தங்களுடைய மகிழ்ச்சிகளைப் பகிர்ந்துக் கொண்டு வருகிறார்கள். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், “நேரு குடும்பத்தில் இருந்து எங்க கட்சியின் புதிய தலைவர் ராகுல்காந்தி வந்திருப்பது எங்களுக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சியை அளிக்கிறது. இவர் இளம் புயல். இளைஞர்களைக் கவர்ந்து இழுக்கக் கூடியவர். அதனால் இளைஞர்கள் பெரும்பாலும் எங்க கட்சிக்கு வருவார்கள். இனி இந்தியாவில் நடைபெரும் அனைத்துத் தேர்தலிலும் இளைஞர்களின் ஓட்டு காங்கிரஸூக்கு விழும். கட்சியில் புதிய இரத்தம் பாய்ச்சப்படும்” என்றனர்.

ah

இந்நிலையில் இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில்:-

“பல்வேறு சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் ராகுல்காந்தி தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார். எதிர்காலத்தில் காங்கிரசை ஆளுங்கட்சியாக அவரால் மாற்ற முடியும். ராகுல்காந்திக்கு தமிழ்நாட்டில் சென்னை அல்லது தமிழகத்தின் மத்திய பகுதியில் பிரமாண்ட பாராட்டு கூட்டம் நடத்தவுள்ளோம். இந்த கூட்டத்துக்கு அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைப்பது பற்றி ஆலோசித்து வருகிறேன்” என்றார்.

Leave a Response