ஓகி புயல் பதிப்புகளை பார்வையிட குமரி மாவட்டம் வருகிறார் பிரதமர்!

kanyakumari2

அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டி போட்டது. கரையை கூட கடக்காமல் கடலில் இருந்தபடியோ கன்னியாகுமரி மாவட்டத்தில் கோரதாண்டவமாடியது ஓகி புயல். இதனால் மீனவர்கள், விவாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏராளமான மரங்கள் வேறோடு பிடுங்கி எறியப்பட்டன.

புயலுக்கு முன்பு கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் ஓகி புயலால் 433 மீனவர்கள் மாயமாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

kfishermen763

மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுவரை 2 மீனவர்கள் மட்டுமே இறந்துள்ளதாக அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம். ஆனால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் அங்கு கரை சேர்க்க முடியாத நிலையில் உடல்கள் மிதப்பதாக கூறி வருகின்றனர்.

காணாமல்போன மீனவர்களை மீட்டுத்தரக்கோரியும் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரியும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தொடர்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட்டனர்.

kmodi872

இந்நிலையில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பிரதமர் மோடி பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 19ஆம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட உள்ளார்.

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தெற்கு கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் தென் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை பிரதமர் மோடி பார்வையிடவுள்ளார். தூத்தூர், சின்னதுறை பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தக்களையில் மக்களை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிதரமர் வருகையை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் உறுதி செய்துள்ளார்.

Leave a Response