பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் முடிவு

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி வரி அமல் உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி வரி அமல் உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தலைநகர் டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும், இந்த கூட்டத் தொடரை அமைதியாக நடத்துவது தொடர்பாக, டெல்லியில் நேற்று அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு, மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

rs-story-647_121115012231_15231

அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மோடி பேசுகையில், குளிர்கால கூட்டத் தொடரை அர்த்தமுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக, அரசியல் பாகுபாடுகளைக் கடந்து அனைத்து கட்சிகளும் கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே, எதிர்க்கட்சி தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டமும் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் எதிர் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இமாசல் மற்றும் குஜராத் தேர்தல் முடிந்த நிலையில் தொடங்கும் இந்த குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response