சென்னையில் இன்று தொடங்குகிறது சர்வதேச திரைப்பட விழா!

295e0e0884c97aa82b6e9f449fa2c241

15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது.
சென்னையில், ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்தத் திரைப்பட விழாவை என்.எஃப்.டி.சி மற்றும் இண்டோ சினி அப்ரிஷியேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும், இந்த விழா, தமிழக அரசின் பங்களிப்புடன் நடக்கும். அந்த வகையில், 15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 14-ம் தேதி தொடங்கி டிசம்பர் 21-ம் தேதி வரை 8 நாள்கள் நடைபெற இருக்கிறது. இந்தத் திரைப்பட விழாவில், உலகின் 50 நாடுகளைச் சேர்ந்த 150 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. ஆறு பிரிவுகளின் கீழ் இந்தப் படங்கள் திரையிடப்பட உள்ளன. கலைவாணர் அரங்கில், மாலை 6 மணிக்கு இதன் தொடக்கவிழா நடைபெறுகிறது. சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, எம்.ஜி.ஆர். நடித்த 2 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

சென்னை சத்யம் திரையரங்கம், ரஷ்ய கலாசார மையம், தேவி, தேவிபாலா போன்ற திரையரங்குகளில் திரைப்பட விழாக் காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இந்தத் திரைப்பட விழாவின் துவக்க விழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை 6 மணி அளவில் நடக்க உள்ளது. விழாவில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி இரண்டு எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்ற ஸ்வீடனின் ‘தி ஸ்கொயர்’ ( The Square) , இங்கிலாந்தின் ‘ஐ, டேனியல் பிளேக்’ (I, Daniel Blake) உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியன் பனோரமா பிரிவில் நியூட்டன் உள்ளிட்ட 11 படங்களும், சிறந்த தமிழ்ப்படங்கள் பிரிவில் ‘அறம்’, ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘கடுகு’ உள்ளிட்ட 12 படங்கள் திரையிடப்பட உள்ளன.

Leave a Response