குமரி மீனவர்களுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் இறங்கிய தமிழர்கள்!

fb3

மீனவர்களுக்கு ஆதரவாக குமரி மாவட்டத்தில் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. நாகை மாவட்டத்திலும் மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கி உள்ளார்கள் மீனவ மக்கள்.

இப்போது தலைநகரான டெல்லியிலும் மீனவர்களுக்கு ஆதாரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். மத்திய அரசே உடனடியாக மீனவ மக்களை காப்பாற்று என்று பெரிய பேனர் அட்டைகளோடு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடை எல்லை குமரிக்கான உரிமை குரல் தலை நகரிலும் இப்போது எழுப்பி உள்ளது.

 

fb4fb2

இதேபோல சிங்கப்பூரிலும் கூட அங்குள்ள தமிழர்கள் குமரி மீனவர்களுக்காக குரல் கொடுத்து போராட்டம் நடத்தியது உணர்ச்சிகரமாக அமைந்துள்ளது. இத்தனை போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இன்றுதான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குமரி மாவட்டம் பக்கமே திரும்பிப் பார்த்துள்ளார் என்பது வேதனையானது.

இந்தப் பதிவு மீனவர்களின் மன வேதனையைப் பிரதிபலிப்பதாக உள்ளது. செத்து மிதக்கும் வரை ஒருவரும் வரவில்லையே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இது.

Leave a Response