21 ஆண்டுகளாக எந்த பதவியிலும் இல்லாத அண்ணன் மீண்டும் பதவியில் வருவர்- முதல்வர்!

rk-nagar-600

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் அ.தி.மு.க சார்பில் மதுசூதனன் வேட்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். வாக்குபதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் பரபரப்பாக தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, வேலுமணி, எம்.பி வேலுமணி ஆகியோர் இன்று புதுவண்ணாரப்பேட்டையில் ஒரே வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

C91eRHvXsAASU2G

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி:-

மதுசூதனன் டெபாசிட் கூட வாங்கமாட்டார் என்கிற தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார். டெபாசிட் நாங்கள் வாங்குகிறோமா இல்லையா என்பதை மக்களிடம் பேசி நாங்கள் முடிவு செய்துகொள்கிறோம்.

ஆனால், சென்னை மாநகர மேயர், துணை முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்து ஆர்.கே நகரில் நீங்கள் என்னென்ன திட்டம் நிறைவேற்றி இருக்கிறீர்கள் என்று பதில் சொல்லத்தயாரா என்று கேள்வி எழுப்பினார்.

IMG_20171211_193244

மேலும், அம்மா வழி வந்த மதுசூதனன் இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால், மக்களுக்கு மீண்டும் தேவையான நல்ல விஷயங்கள் செய்து தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

21 ஆண்டுகளாக எந்த பதவியிலும் இல்லாத அண்ணன் மதுசூதனன் தற்போது மீண்டும் உங்கள் முன் ஓட்டுக்கேட்டு வந்து உள்ளார். அவரை வெற்றி பெற வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டியது மக்களின் கடமை அதை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

stalin

Leave a Response