ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை ஏதோ ஒரு விளையாட்டு மைதானம் போல கருதிக் கொண்டு குதித்தார் விஷால். ஆனால் திரை உலகம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு ஆர்கே நகரில் விஷால் போட்டியிடட்டும் என கூறி சேரன் உள்ளிட்டோர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதற்கு ராதாரவி, ராதிகா, டி ராஜேந்தர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதியில் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் விஷாலுடன் வலம் வந்து கொண்டிருந்த நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொன்வண்ணன் இன்று திடீரென தமது பதவியை ராஜினாமா செய்தார். தாம் சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக பொன்வண்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், விஷால் ஆர்.கே.நகரில் போட்டியிடுவது அவரது தனிப்பட்ட முடிவு . நடிகர் சங்கத்தில் அரசியல் இருக்க கூடாது. பத்திரிகையாளர்கள் பொதுமக்கள் கேட்கும் போது எனக்கு தர்மசங்கடமாக உள்ளது. விஷால் எனக்கு நல்ல நண்பர் எங்கள் நட்பு எபோதும் தொடரும் . எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை. இப்போது விஷால் ஆர்.கே.நகரில் போட்டியிட்டால் நான் அவருக்கு முழு ஆதரவு அளிப்பேன். ஒற்றன் செய்தி பிரத்தேக பேட்டியில் பொன்வண்ணன் கூறியுள்ளார். இந்த ராஜினாமாவின் முலம் விளம்பரம் தேட நினைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.