ஆர்.கே.நகர் பேரை கேட்டால் தலைதெறிக்க ஓடும் பாஜக தலைவர்கள்!

rk

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் யாருமே கிடைக்காத பரிதாப நிலையில் பாரதிய ஜனதா கட்சி தவியாய் தத்தளித்திருக்கிறது. ஆர்.கே.நகரில் போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது என்பதால் அக்கட்சி வேட்பாளராக ஒருவர் கூட போட்டியிட விரும்பவில்லை என கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம்; கழகங்கள் இல்லாத ஆட்சி அமைப்போம் என கூவிக் கொண்டிருக்கிறது பாஜக. ஆனால் தமிழக மண்ணில் பாஜக காலூன்றக் கூடிய முடியாத படுகேவலமான நிலையில்தான் இருக்கிறது.

bjp-symbol_story_647_121715021956

தமிழக கட்சிகளை உடைத்து அதன் மீது சவாரியே செய்தாலும் பாஜக குப்புற கவிழ்ந்து விழுவது என்பது யதார்த்தம். இதனைத் தான் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலும் அம்பலப்படுத்தியுள்ளது.

Gangai Amaran 2

கடந்த முறை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் இசை அமைப்பாளர் கங்கை அமரனை பாஜக வேட்பாளராக்கியது. ஆனால் இம்முறை கங்கை அமரன் வேட்பாளராக போட்டியிட மறுத்துவிட்டார்.

இதையடுத்து கடந்த ஒரு வார காலமாக யாரை வேட்பாளாக நிறுத்துவது என படுதீவிர ஆலோசனை நடத்தியது பாஜக. ஆனால் பாஜக மூத்த தலைவர்கள் உட்பட ஒருவர் கூட ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்பவில்லை.

bjpta

ஏனெனில் ஆர்.கே. நகரில் போட்டியிட்டால் டெப்பாசிட்டே கிடைக்காது என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள் அந்த தலைவர்கள். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இந்த அவலம் தெரியும் என்பதால் அவர் சார்ந்த சமூக வாக்குகள் இருந்தபோதும் கூட போட்டியிடாமல் பம்மிவிட்டார்.

ஒரு சின்ன தொகுதி இடைத் தேர்தலுக்கே வேட்பாளரை கண்டுபிடிக்க இப்படி அல்லோகலப்படுகிறது பாஜக.. 234 தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளர்களை கண்டுபிடித்து ஒவ்வொரு பூத்துக்கும் ஏஜெண்ட் போட்டு.. அத்தனை பேரையும் ஜெயிக்க வைத்து.. இப்பவே கண்ணு கட்டுதே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Response