மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து மீனவர்களை மீட்க வேண்டும் : டிடிவி தினகரன்

TTVDIN1

மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து மீனவர்களை மீட்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். நிவாரண பணிகளை தூரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று ட்விட்டரில் டிடிவி தினகரன் பதிவு செய்துள்ளார். மீன்பிடிக்க சென்ற பல நூறு மீனவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும், 86 மீனவர்கள் மட்டுமே காணவில்லை என்று வழக்கம் போல் அரசு பூசி மெழுகுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இலங்கையால் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளான மீனவர்கள் மீது தற்போது ஓகி புயல் தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Response