இந்தியா இலங்கை டெஸ்ட்- டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது இந்தியா!

-india-srilanka67

இலங்கைக்கு எதிராக இந்தியா டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. முதலில் கொல்கத்தாவில் நடந்த போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

klrahul-umeshyadav

இன்று மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் இரு மாற்றங்கள் உள்ளன. கே.எல்.ராகுல் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு பதிலாக ஷிகர் தவானும், முகமது ஷமியும் களத்தில் உள்ளனர். அதேபோல் இலங்கை அணியில் ரங்கனா ஹெராத்துக்கு பதிலாக லக்ஷன் சந்தாகன் விளையாடுகிறார். இந்த அணிக்கு கேப்டனாக இருந்து தினேஷ் சந்திமால் வழிநடத்துவார்.

Leave a Response