ஓகி புயல் ஒழிஞ்சு போனாலும் கன்னியாகுமரியில் கனமழை மக்கள் பீதி!

puyal1

கன்னியாகுமரி அருகே தென் மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த ‘ஒகி’ புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கொட்டித்தீர்த்த மழையால் குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  ஆறுகளில் கடும் வெள்ளப் பெருகு ஏற்பட்டுள்ளது.

cyclone-ockhi15.jpg.pagespeed.ic.RxTOEfYA9V

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்தன. , மின்கம்பங்களும் சாய்ந்து முற்றிலுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மாவட்டமே இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.

தமிழக அரசு விரைவான நிவாணப்பணிகளை மேற்கொண்டுள்ளது. மின்ம்பங்கள் வேகமாக சீரமைக்கப்பட்டு வருகின்றன. சாலை போக்குவரத்தை சரி செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

oki

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. 20000 ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்ட ஓடுவதால் பொது மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டபடி ஒகி புயல், தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவை நோக்கி செல்கிறது என்றாலும் தென் மாவட்டங்களில் மழை நீடித்தது வருகிறது.

rain-kanyakumari-storm-30-1512025194.jpg.pagespeed.ic.KUdiCi-CCk

இன்று அதிகாலை கன்னியாகுமரி, தக்கலை,திருவட்டார் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் மீண்டும் கன மழை கொட்டத் தொடங்கியுள்ளது. இன்னொரு கனமழைக்கு கன்னியாகுமரி மாவட்டம் தாங்குமா என அம்மாவட்ட மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

 

இதே போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த காற்று  வீசி வருவதால் மீனவர்கள் இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இதே போல் திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும்  இன்று அதிகாலை முதல் பலத்தமழை பெய்து வருகிறது. பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response