ஓகி புயல் காரணமாக தென் தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் மூடல்!

puyal

கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த ஓகி புயல் தற்போது லட்சத்தீவு அருகே சென்றுள்ளது. இருப்பினும் தென் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

 திண்டுக்கள், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கொடைக்கானல் பகுதியில் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக அங்குள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களான கொடைக்கானல் குணா குகை, தூண் பாறை, மேயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன. தொடர் மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா தலங்களை வனத்துறை மூடியுள்ளது.

பைன்மரக்காடுகள், பன்னிரென்டு மைல் ஆகிய சுற்றுலா தலங்களை வனத்துறையினர் முடியுள்ளனர். தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Response