மீண்டும் வருகிறது அடுத்த புயல்- அதற்கு என்ன பெயர் தெரியுமா?

puyal1

உலக வானிலை ஆய்வு அமைப்புடன், ஐ.நா.,வின் ஆசிய, பசிபிக் மண்டலத்திற்கான பொருளாதார மற்றும் சமூக கமிஷன் இணைந்து 2000த்தில் புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறையை கொண்டு வந்தன.

தமிழத்தின் தென் மாவட்டங்களை புரட்டிப் போட்டு வரும் புயலுக்கு ஓகி என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் புயலுக்கு சாகர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது

maprain

 

உலகளவில் வானிலை முன்னறிவிப்பு மற்றும் பொதுமக்கள், வானிலை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் எளிதில் தொடர்புகொள்ள வசதியாக,, எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடுவதற்கு உதவியாக இந்த முறை கொண்டுவரப்பட்டது. உலகளவில் வடக்கு அட்லாண்டிக், கிழக்கு வடக்கு பசிபிக், மத்திய வடக்கு பசிபிக், மேற்கு வடக்கு பசிபிக், வடக்கு இந்திய கடல், தென்மேற்கு இந்தியக் கடல், ஆஸ்திரேலியா, தெற்கு பசிபிக், தெற்கு அட்லாண்டிக் ஆகிய 9 கடல் மண்டலங்களில் உள்ள நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கி வருகின்றன.

வடக்கு இந்திய கடல் பகுதியில் ஏற்படும் புயல்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் பெயர் வைத்து வருகிறது. முதன் முதலில் 2004ஆம் ஆண்டில், வந்த புயலுக்கு வங்கதேசம் ஓனில் என்று பெயர் வைத்தது. தற்போது உருவாகியுள்ள ஓகி புயலுக்கும் வங்கதேசம்தான் பெயர் வைத்துள்ளது. வங்காள மொழியில் ‘ஓகி’ என்றால் கண் என்று அர்த்தம்.

Leave a Response