டெல்லியில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்கிறார் டிடிவி!

2lefe

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் 8 மாதங்களாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் மதுசூதனன் தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து அதிமுக கட்சி பெயர், கொடி ஆகியவையும் மதுசூதனன் தலைமையிலான அணி வசமானது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று தினகரன் தரப்பு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளது.

ttv1

இதனிடையே அதிமுகவின் கணக்கு வழக்குகளை சசிகலா, தினகரன் தரப்பு ஆய்வு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. இன்றைய மேல்முறையீட்டு மனுவில் இந்த உத்தரவையும் இணைக்க தினகரன் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Response