இரவு பகல் பார்க்காமல் வெளுக்கும் மழை சென்னை மக்கள் அவதி!

 

rain

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பல பகுதிகளில் கொட்டி வருகிறது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை வெளுக்கிறது.

summer_rain
மேலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை நீடிக்கிறது. இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

 

சென்னையிலும் சாந்தோம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, எண்ணூர் உட்பட சென்னையின் பல இடங்களிலும் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி வருகிறது. இன்னும் விட்டாமல் ஒரு சில இடங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடல் சீற்றமாக இருப்பதால் எண்ணூர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

Leave a Response