சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

6a8f1286ce7c318e8bac6ae476f7db3d

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. பிற்பகலுக்குப்பின் சென்னை மாநகரை நோக்கி திரண்ட கருமேகங்கள் எப்போது வேண்டுமானாலம் கொட்டித்தீர்க்கலாம் என்ற ரீதியில் மிரட்டியது.

இந்நிலையில் தற்போது சென்னை கே கே நகர், கோடம்பாக்கம், தி நகர், மயிலாப்பூர், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதேபோல் புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த திடீர் மழையால் சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதால் அண்ணாசாலை, வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அலுவலகம் சென்று திரும்புவர்கள் அவதியடைந்துள்ளனர். இருப்பினும் இதுவரை போதுமான அளவு மழை பெய்யாததால் மக்கள் இந்த மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Response